×

குன்னூரில் விசிக சிறப்பு செயற்குழு கூட்டம்

 

குன்னூர், நவ.22: குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கான விடுதலை சிறுத்தை கட்சி மறு சீரமைப்பு குறித்து சிறப்பு செயற்குழு கூட்டம் குன்னூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கிழக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கான கட்சி மறு சீரமைப்பு சிறப்பு செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கோவை, நீலகிரி மண்டல மேலிட பொறுப்பாளர் துரை இளங்கோ கலந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு குறைபட்சம் 100 பேர் பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பாக பணி செய்ய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து நகரம், ஒன்றியம், வட்டம் போன்ற பகுதிகளில் புதிதாக தேர்ந்தெடுத்தப்பட்ட பொறுப்பாளர்களுக்கு, பொறுப்பாளர் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர்கள் சகாதேவன், ராஜேந்திர பிரபு, மண்டல துணை செயலாளர் மண்ணரசன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பெரியசாமி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post குன்னூரில் விசிக சிறப்பு செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Liberation Tigers Party ,Coonoor Assembly Constituency ,Nilgiris District Coonoor East District Liberation Tigers Party for Coonoor Legislative Constituency ,Dinakaran ,
× RELATED எனக்கு விஜயுடன் எந்த முரண்பாடும்...