×

சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரிமங்கலம், நவ.22: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட வட்டார மேலாளர் அனுசுயா தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். இதில் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண் உரிமை குறித்தும் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவகாமி, பரிமளா, பயிற்சியாளர் பாரதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Tamil Nadu State Rural Livelihood Movement ,Government Girls Higher Secondary School ,Anusuya ,Programme ,
× RELATED சங்கரன்கோவிலில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி