- சங்கரன் கோவில்
- சங்கரன் கோவில்
- சங்கரன்கோவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பிரச்சாரம்
- சங்கரன்கோவில்
- லாலா
- சங்கரன்கோவில் பாலியல் வன்முறைக்கு எதிரான வன்முறை
- தின மலர்
சங்கரன்கோவில். டிச.4. சங்கரன்கோவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் தலைமை வகித்து பிரசார பேரணியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து உறுதிமொழி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிடிஒ கந்தசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் களப்பாகுளம் சிவசங்கரி, மடத்துப்பட்டி செய்யது இப்ராஹிம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் போத்திராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் இசக்கியம்மாள், மகேஸ்வரி, சகிலா, முத்துச்செல்வி ஆகியோர் செய்து இருந்தனர்.
The post சங்கரன்கோவிலில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி appeared first on Dinakaran.