×

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் குறித்த ஆலோசனை கூட்டம்

திருப்பரங்குன்றம், நவ. 21: திருப்பரங்குன்றம் மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, அங்குள்ள பள்ளிவாசலில் நேற்று அனைத்துகட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா விமல், திமுக சார்பில் கிருஷ்ணபாண்டி, அதிமுக முத்துக்குமார் சக்தி, மதிமுக முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எஸ்.எம் பாண்டி, காங்கிரஸ் நகேஸ்வரன், தமுமுக சேக், விசிக முத்துக்குமார், காங்கிரஸ் நகேஸ்வரன், தமுஎச தியாகராஜன், எஸ்டிபிஐ யூசுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்ற காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவது. மாநகர காவல் ஆணையரிடம் அனைத்து கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிப்பது. மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

The post திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் குறித்த ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karthika Deepam ,Thiruparangunram ,Tiruparangunram ,Tiruparangunram hill ,Municipal Corporation Zone ,President ,Suvita Vimal ,DMK ,Krishna Pandi ,AIADMK ,Muthukumar Sakthi ,
× RELATED கோவை – திருவண்ணாமலைக்கு 89 சிறப்பு பேருந்துகள் இயக்கம்