×

சென்டர் மீடியனில் மோதிய லாரி

கோபி.நவ.21: கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய லாரி சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியன்(35). லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து பழைய பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு பவானிசாகரில் உள்ள காகித ஆலைக்கு சென்று கொண்டிருந்தார்.

லாரி கோபி அருகே உள்ள காசிபாளையம் என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய லாரி தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.விபத்து குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் மற்றும் கவுந்தப்பாடி நெடுஞ்சாலை ரோந்து பணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

The post சென்டர் மீடியனில் மோதிய லாரி appeared first on Dinakaran.

Tags : Kasipalayam ,Gobi ,Munian ,Orasampatu village ,Shankarapuram ,Kallakurichi district ,Lorry ,Chennai ,Dinakaran ,
× RELATED வேடசந்தூரில் மின்தடை