- கார்ப்பரேஷன் கணக்கு நிலைக்குழு
- முதல் அமைச்சர்
- எம்.கே.
- ஸ்டாலின்
- ஆலந்தூர்
- அயோத்தி அம்மாள்
- திமுக
- சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு
- கே.கே.நகர் கே.தனசேகரன்
- ராமநாதபுரம் மாவட்டம்
- ராஜசிங்கமங்கலம்
- Chathamangalam
- மு. கருப்பதேவா
- நகராட்சி கணக்கு நிலைக்குழு
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
ஆலந்தூர்: திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவருமான கே.கே.நகர் க.தனசேகரன் தாயாரும், ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம், சாத்தமங்கலம் கிராம அலுவலர் மு.கருப்பதேவரின் மனைவியுமான அயோத்தி அம்மாள் நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: க.தனசேகரனின் தாயார் அயோத்தி அம்மாள் மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு கூறியுள்ளார்.
அயோத்தி அம்மாளின் உடல் இன்று 12 மணிக்கு சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இறுதி சaடங்கு நடைபெறுகிறது. மறைந்த அயோத்தி அம்மாளுக்கு க.தனசேகரன், க.இளங்கோ, க.கஜேந்திரன், க.தமிழ்செல்வன் ஆகிய 4 மகன்களும், கோட்டையம்மாள் ராசு, சுந்தரி நாகசாமி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
The post மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவரின் தாயார் காலமானார்: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.