×

வெள்ளகோவில் அருகே இன்று நூல் மில்லில் திடீர் தீ

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே இன்று நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பில் சேதமானது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல்(51). இவருக்கு சொந்தமான கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் நூல் மில் தீர்த்தாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 7.50 மணி அளவில் மில்லின் ஒரு பகுதியில் இருந்து திடீரென புகை வந்து தீ மளமளவென மில்லின் பல பகுதிக்கும் பரவியது. இதைப் பார்த்த ஊழியர்கள் வெள்ளகோயில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மில்லில் மெஷின், பஞ்சு அடுக்கி வைத்திருக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பற்றிய தீயை 3 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் மெஷின், பஞ்சு என ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெள்ளகோவில் அருகே இன்று நூல் மில்லில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Kathirvel ,Tiruppur district ,Thirthampalayam ,
× RELATED வெள்ளகோவில் அருகே கைத்தறி ரக...