×

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குலசேகரம்: குமரியின் குற்றலாம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை, பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே திற்பரப்பு அருவிக்கு வந்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியல் போட்டனர்.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியின் மேற்பகுதியில் உள்ள உல்லாச படகுசவாரிக்கு சென்று படகுசவாரி செய்து கோதையாற்றின் எழில்மிகு அழகை கண்டு ரசித்தனர். மேலும் அருவிக்கு அருகே உள்ள நீச்சல் குளத்திலும் ஏராளமனவர்கள் குளித்தனர். அருவியில் காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருந்தது. வருகிற 1ம் தேதி புத்தாண்டு வரை திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும் என தெரிவித்தனர். திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் அங்குள்ள கடைகளில் விற்பனை படுஜோராக இருந்தது. போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியை செய்தனர்.

The post திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Thirparappu Falls ,Kulasekaram ,Kumari district ,Tamil Nadu ,Kutturalam ,Kumari ,Christmas ,
× RELATED மாத்தூர் தொட்டிப் பாலத்தில் சிறுவர் பூங்கா சீரமைப்பு