×

தமாகா ஆலோசனை கூட்டம்

ஊத்தங்கரை, நவ.19: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமாகா ஆலோசனை கூட்டம், ஊத்தங்கரையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து பேசினார். மேலிட பார்வையாளர் குலோத்துங்கன், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கான் பாய், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் நூருல்லா ஷெரிப், மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் மகேந்திரன், மாவட்ட மகளிரணி மாலா, வட்டாரத் தலைவர் அழகேசன், விவசாய அணி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தமாகா ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamaka ,Uthangarai ,Krishnagiri ,East District ,Tamaka Council ,Selvaraj ,Senior Observer ,Kulothungan ,Krishnagiri Central District ,President ,Jayaprakash ,District Vice President ,Jaishankar ,Dinakaran ,
× RELATED குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு