×

பஸ்சில் சிக்கி மொபட்டில் சென்ற பெண் பலி

 

வேலூர், நவ.18: வேலூரில் தோழியுடன் திருமணத்துக்கு சென்று மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் பஸ்சில் சிக்கி பலியானார். வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார்(45). இவரது மனைவி தேவி(40). இவரது தோழி வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த குமரவேல் மனைவி கவிதா(39). இருவரும் வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை காட்பாடியில் நண்பர் திருமணத்திற்கு இருவரும் மொபட்டில் சென்றனர். திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மொபட்டில் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

மொபட்டை கவிதா ஓட்டி வந்தார். வேலூர் அண்ணா சாலையில் சென்றபோது பின்னால் வந்த பஸ், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டின் பின்னால் அமர்ந்து வந்த தேவியும், மொபட்டை ஓட்டி வந்த கவிதாவும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் தேவி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கவிதா கையில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ்சில் சிக்கி மொபட்டில் சென்ற பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Mobat ,Sivakumar ,Vellore Salavanpet ,Devi ,Kavita ,Kumaravel ,Vellore Kosappetta ,
× RELATED சிறை அதிகாரிகளின் வீடுகளில் கைதிகள்...