×

சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், நவ.16: சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ்,ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன்,அருணாசலம், துளசிமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாநகரில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Communists ,Tirupur ,Tirupur Municipal Corporation ,Communist Party of India ,Deputy Secretary ,Senthilkumar ,Communist ,Dinakaran ,
× RELATED மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்