×

இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நோயாளிகள் வசதிக்காக நீட்டிப்பு

 

குன்னூர், நவ.16: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெட்போர்ட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் கண்களை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் கண் நோய்களால் பார்வை இழப்பு, தாழ்வு மனப்பான்மை போன்ற சிக்கல்கள் ஏற்படும் என்பதால், கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இம்முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். கண்களில் கோளாறுகள் இருந்த கண் நோயாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்த முகாமை நோயாளிகளின் வசதிக்காக நவம்பர் 23ம் தேதி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர்.

The post இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நோயாளிகள் வசதிக்காக நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Gunnar ,Bedford ,Kunnur, Neelgiri district ,Dinakaran ,
× RELATED குன்னூர் மலைப்பாதையின் இடையே...