×

ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

 

ஊட்டி, நவ.16: தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊட்டி டவுன் டிஎஸ்பி யசோதா, இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்று போலீஸ் நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினர். பின்னர் காவல் நிலையங்கள் எவ்வாறு செயல்படும், அங்கு ஆவணங்கள் பராமரிப்பு, குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறை எவ்வாறு இருக்கும், காவல் துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், கனகராஜ், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் நாள் விழாவாக, கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் சுபாஷினி, இஷானி ஆகியோர் நேருவின் உருவ படத்தைத் திறந்து வைத்து கேக் வெட்டினர்.

விழாவில் தலைமையாசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். இதில் ஓவியம், பாடல், பேச்சு, திருக்குறள், கையெழுத்து, விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கமலா, மருத்துவர் திவ்யா, சிறப்பு பயிற்றுநர் மீனா, பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர். முன்னதாக அனைத்து குழந்தைகளையும் ரோஜா பூ வழங்கி வரவேற்றனர். இறுதியில் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

The post ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty City Central ,Station ,Ooty ,Ooty Town ,DSP ,Yashoda ,Inspector ,Muralitharan ,Ooty City Central Police Station ,National Children's Day ,Ooty Central Police Station ,Dinakaran ,
× RELATED சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்...