×

டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

நாமக்கல், நவ.16 நாமக்கல்லில், தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் வரதராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் ராஜ்குமார் கோரிக்கைகள் குறித்து பேசினார். செயலாளார் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் தர்மலிங்aகம், லோகேந்திரன், இணை செயலாளர்கள் அரி, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். நலிவடைந்து வரும் ரீட்ரேடிங் தொழிலை காக்க மின்சார கட்டணத்தில் சலுகை தர வேண்டும். ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் மல்லீஸ்வரன் நன்றி கூறினார்.

The post டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tire Retreading Owners Association ,Namakkal ,Taluka Tire Retrading Owners Association ,President ,Varadaraj ,State President ,Rajkumar ,Ravichandran ,Vice-Presidents ,Dharmalingakam ,Lokendran ,Ari ,Venkatesh ,Tire ,Retreading ,Owners ,Association ,Dinakaran ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்