×

அழகு சௌந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம், நவ.14: மல்லசமுத்திரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகுசௌந்தரராஜ பெருமாள் கோயிலில், ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு சாளக்கிராம பிரதிஷ்டை ஹோமம் நடந்தது. விஷ்வக்ஸேன ஆராதனை, புண்யாகவாசனம், பிரதிஷ்டை ஹோமம், பூர்ணாஹூதி நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் முன்பு நெய் தீபமேற்றி வழிபட்டனர்.

The post அழகு சௌந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Soundararaja Perumal ,Mallasamutram ,Utsavar Perumal ,Varapirai Ekadasi ,Sridevi ,Bhudevi ,Sametha Akussoundararaja Perumal ,Salakrama Pratishtai Homam ,Perumal ,Aradhana ,
× RELATED கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள்...