×

இமானுவேல் சேகரன் மணிமண்டபத்திற்கு தடை கோரிய வழக்கிற்கு எதிராக மனு

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு சார்பில் ரூ.3 கோடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு தடை கோரி ஆப்பநாடு மறவர் சங்க செயலர் குணசேகரன் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டும் பணி 73 சதவீதம் முடிந்துள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. தற்போது வழக்கு தொடர்ந்ததில் உள்நோக்கம் உள்ளது என கூறியிருந்தார். எனவே இந்த மனுவை ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

The post இமானுவேல் சேகரன் மணிமண்டபத்திற்கு தடை கோரிய வழக்கிற்கு எதிராக மனு appeared first on Dinakaran.

Tags : Emanuel Shekaran ,Mani ,Madurai ,Selvakumar ,Madurai High Court ,Emanuel Sekaran ,Paramakkudi, Ramanathapuram district ,Mani Mandapam ,Dinakaran ,
× RELATED மன்மோகனுக்கு ஜனாதிபதி பதவி வழங்கி...