×

மன்மோகனுக்கு ஜனாதிபதி பதவி வழங்கி யுபிஐ-2 ஆட்சியில் பிரணாப் பிரதமராகி இருக்க வேண்டும்: மணி சங்கர் அய்யர் கருத்து

புதுடெல்லி: ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 ஆட்சியில் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவியும், மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பதவியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறி உள்ளார். ங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர் எழுதிய ‘ஏ மேவ்ரிக் இன் பாலிடிக்ஸ்’ புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மணிசங்கர் அய்யர் கூறியிருப்பதாவது: டந்த 2012ம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஐ)-2 ஆட்சியின் போது, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பல பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் நலம் முழுமையாக குணமாகவில்லை. அவர் மெதுவாக செயல்படத் தொடங்கினார்.

இது அவரது நிர்வாகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியது. அதே சமயம், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உடல் நலமும் குன்றியது. இரு முக்கிய தலைவர்களும் உடல் நலமில்லாததால், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் சரியாக கையாளப்படவில்லை.

அந்த சமயத்தில், ஜனாதிபதியாக மன்மோகன் சிங்கும், பிரதமராக பிரணாப் முகர்ஜியும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம், நல்ல ஆரோக்கியத்துடனும், அரசை வழிநடத்தும் ஆற்றலுடனும் மிகவும் சுறுசுறுப்பான பிரதமராக பிரணாப்பும், நாட்டிற்கு சிறந்த சேவை செய்த மன்மோகன், தேசத்திற்கு தலைமை தாங்கும் உயர் பதவியிலும் இருப்பது சிறந்த நிர்வாகத்தை தந்திருக்கும். இது குறித்து சோனியா காந்தியும் பரிசீலித்தார்.

ஆனால், ரகசியமாக சில காரணங்களுக்காக மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியில் தக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு அனுப்பப்பட்டார். இதனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி-3 ஆட்சி உருவாக கூடிய அனைத்து வாய்ப்புகளும் அழிந்ததாக நான் கருதுகிறேன். பிரணாப் பிரதமராக்கப்பட்டிருந்தாலும், 2014ல் காங்கிரஸ் தோற்றிருக்கலாம். ஆனால் வெறும் 44 சீட்கள் என்ற மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது. இவ்வாறு கூறி உள்ளார்.

The post மன்மோகனுக்கு ஜனாதிபதி பதவி வழங்கி யுபிஐ-2 ஆட்சியில் பிரணாப் பிரதமராகி இருக்க வேண்டும்: மணி சங்கர் அய்யர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Pranab Mukherjee ,Mani Shankar Aiyar ,New Delhi ,United Progressive Alliance ,Congress ,Mani Shankar Aiyar… ,
× RELATED மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!