×

ஜார்க்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 14.71 லட்சம் வாக்காளர்களை கொண்ட வயநாடு தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட்டனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஜார்க்கண்டில் முதற்கட்டமாக தேர்தலில் 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு நவ.20-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

The post ஜார்க்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Kerala ,Delhi ,Wayanadu ,Lok Sabha ,Priyanka Gandhi ,Congress ,Sathyan Mukheri ,Communist Party ,Jharkhand, Kerala States ,
× RELATED தேர்வாணைய தேர்வில் முறைகேடு...