மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது. மராட்டிய தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக கூட்டணி 220 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 இடங்களில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. பா.ஜ.க அணியில் உள்ள சிவசேனா 57 இடங்களிலும், என்.சிபி 36 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் அணியில் சிவசேனா 18 இடங்களில், என்.சி.பி 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க மட்டும் தனியாக 125 இடங்களில் முன்னிலை காங்கிரஸ் வெறும் 20 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் சிவசேனா கட்சி தன் பக்கம் உள்ளது என ஏக்நாத் ஷிண்டே நிரூபித்துள்ளார். மகாராஷ்டிராவில் பிளவுபட்ட சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே பலத்தை நிரூபித்துள்ளார். 54 இடங்களில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி முன்னிலை பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான 145 இடங்களுக்கும் கூடுதலாக பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியை தக்கவைக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி 105 இடங்களில் முன்னிலை பெற்று பின்னடைவு அடைந்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே மகாயுதி, மகா விகாஸ் அகாடி ஆகிய 2 கூட்டணிகளில் உள்ள தலைவர்களும் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் மும்முரம் காட்டி வருவதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மகாயுதி கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அகியோர் போட்டியில் உள்ளனர். அதேபோல், மகா விகாஸ் அகாடியில் உத்தவ் தாக்கரேவும், ஜெய்ந்த் பாட்டீலும் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிகிறது
The post பாஜக கூட்டணி 220 இடங்களில் முன்னிலை: மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி appeared first on Dinakaran.