×

ஒடிசா, ஆந்திரா, மே.வங்கம், ஹரியானா மாநிலங்களில் டிசம்பர் 20ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு டிச.20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திராவில் 3, ஒடிசா, மேற்குவங்கம், ஹரியானாவில் தலா ஒரு
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். டிச.20-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று மாலையே நடைபெறும்.

6 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலங்களவை உறுப்பினர் வெங்கடரமண ராவ் மோபிதேவி, பேடா மஸ்தான் ராவ் யாதவ், ரியாகா கிருஷ்ணய்யர், ஒடிஷா மாநிலங்களவை உறுப்பினர் சுஜித் குமார், மேற்குவங்கம் மாநிலங்களவை உறுப்பினர் ஜோஹர் சிர்கார்; ஹரியானா மாநிலங்களவை உறுப்பினர் கிருஷ்ண லால் பன்வார் ஆகியோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

டிசம்பர் 3ம் தேதி அறிவிப்புகள் வெளியிடப்படும். வேட்புமனுவை அளிக்க டிசம்பர் 10ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்ப பெற 13ம் தேதி கடைசி நாளாகும். டிசம்பர் 20ம் தேதி வாக்கு பதிவு நடைபெறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

 

The post ஒடிசா, ஆந்திரா, மே.வங்கம், ஹரியானா மாநிலங்களில் டிசம்பர் 20ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Odisha ,Andhra Pradesh ,Bengal ,Haryana ,Election Commission ,Delhi ,Rajya Sabha ,West Bengal ,
× RELATED ஒடிசா மாநிலம் சத்தீஸ்கர் –...