×

வயநாடு தொகுதியில் 5 மணி வரை 57.29 % வாக்குப்பதிவு

கேரளா: வயநாடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 57.29% வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 14.71 லட்சம் வாக்காளர்களை கொண்ட வயநாடு தொகுதியில் 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மக்களவை தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. இந்த தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மையங்களில் காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். காலை 10 மணி நிலவரப்படி 14.07 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த பகுதிகளில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இங்குள்ள பெரும்பாலான வாக்காளர்கள் இறந்து விட்டதாலும், பலர் காயங்களுடன் இருப்பதாலும் ஓட்டு போட பெரும்பாலானோர் வரவில்லை. இதனால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று காலை கல்பெட்டா செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட்டார். அங்கு வாக்களிக்க வந்தவர்களை சந்தித்து வாக்களிக்க உற்சாகமூட்டினார்.

The post வயநாடு தொகுதியில் 5 மணி வரை 57.29 % வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Vayanadu ,Kerala ,Wayanadu ,Wayanadu Lok Sabha ,Dinakaran ,
× RELATED சொத்து பற்றி தவறான தகவல் பிரியங்கா...