×

ஆட்சி நிர்வாகம், கட்சிப்பணியில் முதல்வரும், துணை முதல்வரும் சுற்றிச் சுழன்று பணிபுரிகின்றனர்: கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் புகழாரம்

 

சின்னமனூர், நவ.13: சின்னமனூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரச் செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை வரவேற்றார். இதில் கலந்து கொண்டு பேசிய கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், அண்ணாவின் பாதையில் சமுதாயம் காக்கவும், சுயமரியாதையுடன் சமத்துவமாக வாழவும் திமுகவின் தூணாக நின்று 50 ஆண்டு காலம் கலைஞர் வழிகாட்டினார்.

கலைஞருக்கு பின் கட்சியை தாங்கிப் பிடிக்கும் தளபதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டார். இன்று திமுகவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இளைய தளபதியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின், கட்சியினரின் நம்பிக்கையை காப்பாற்றி வருகிறார். பொது சேவை, கட்சிப் பணி, ஆட்சி நிர்வாகம் என அனைத்திலும் நடுநிலையாக செயல்பட்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள தமிழக முதல்வரும், அவருக்கு உறுதுணையாக பணியாற்றும் துணை முதல்வரும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இணைந்து சுற்றிச் சுழன்று செயல்பட்டு வருகின்றனர்.

மக்கள் நலத்திட்டங்கள் மூலமும், விவசாயிகளின் தோழனாகவும், திராவிட மாடல் ஆட்சியின் மூலம் நாட்டிற்கே வழிகாட்டும் தலைவராகவும் இன்று தமிழக முதல்வர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். வரும் 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சி தொடர அனைவரும் களப்பணி ஆற்ற வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

The post ஆட்சி நிர்வாகம், கட்சிப்பணியில் முதல்வரும், துணை முதல்வரும் சுற்றிச் சுழன்று பணிபுரிகின்றனர்: கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kambam ,Ramakrishnan Pukhazaram ,Chinnamanur ,DMK ,City Secretary ,Muthukumar ,South District ,Deputy Secretary ,Senthilkumar ,East Union ,Annathurai ,Kambam MLA ,Ramakrishnan ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...