×
Saravana Stores

பழநி வழித்தடத்தில் செல்லும் சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

 

பழநி, நவ. 13: பழநி வழித்தடத்தில் செல்லும் சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பழநி நகர செயலாளர் கந்தசாமி அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி கோயிலுக்கு ரயில் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் இரவு தங்குவதற்கு வசதியாக பழநி ரயில் நிலையத்தில் படுக்கை வசதியுடன் கூடிய டார்மென்டரி கட்டி கொடுக்க வேண்டும்.

பழநி ரயில் நிலையத்தை சுற்றியும், பணியாளர் குடியிருப்பு பகுதியிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வலம் வருகின்றன. எனவே, சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்.

பழநி வழித்தடத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு பாலக்காடு- திருச்செந்தூர் ரயில் மற்றும் பாலக்காடு- சென்னை ரயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும். கோவை- ராமேஸ்வரம், பாலக்காடு-ராமேஸ்வரம், கோவை- கன்னியாகுமரி, கோவை- திருப்பதி ரயில்கள் இயக்க வேண்டும். பழநி மார்க்கத்தில் கோவை- நாகர்கோவில், கோவை- பழநி- திண்டுக்கல்- திருச்சி- வேளாங்கண்ணி ரயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

 

The post பழநி வழித்தடத்தில் செல்லும் சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Palani ,Marxist-Communist ,City ,Marxist Party ,Kandasamy ,Southern Railway Madurai ,Divisional Manager ,Marxist ,Communist ,Dinakaran ,
× RELATED பழநி மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக சிறப்பு யாகம்