- திருப்பூர்
- திருப்பூர் ஈஸ்வரன் கோவில் ரோட்
- புஷ்பா ரவுண்டானா
- நாமக்கல்
- சேலம்
- சத்தியமங்கலம்
- நிலக்கோட்டை
- தின மலர்
திருப்பூர், நவ.14: திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு நாமக்கல், சேலம், சத்தியமங்கலம், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் இங்கு பூக்களை வாங்கிச்சென்று திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு துவங்கியதால் மல்லிகை மற்றும் முல்லைப் பூக்கள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்தது.
நேற்றும், இன்றும் தொடர் முகூர்த்தம் என்பதால் மல்லிகை பூக்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக கடந்த வாரம் ரூ.1200க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், முல்லை ரூ.800க்கும், ஜாதிமல்லி ரூ.600க்கும், மைசூர் காக்கடா ரூ.600க்கும், சேலம் காக்கடா ரூ.720க்கும் என விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் மற்ற பூக்களான சம்பங்கி ரூ.140க்கும், பெங்களூர் ரோஸ் வகைகள் ரூ.200 முதல் ரூ.250 வரையிலும், அரளி ரூ.240 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் விசேஷங்கள் வருவதை தொடர்ந்து பூக்கள் விலை அதிகரித்திருப்பது சில்லறை வியாபாரிகளிடையே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பனிப்பொழிவு துவங்கியதால் மல்லிகைப்பூ வரத்து குறைந்தது appeared first on Dinakaran.