புதுடெல்லி: வணிகம் தொடர்பான வழக்குகளை விரைவாகவும், திறமையாகவும், குறைந்த செலவிலும் முடிப்பதை உறுதி செய்யும் வகையில், வணிக நீதிமன்றங்கள் சட்டம் கடந்த 2015ல் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் 2018ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வணிக நீதிமன்றங்கள் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்வது குறித்து ஒன்றிய சட்ட விவகாரங்கள் துறை தற்போது பரிசீலித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வணிக நீதிமன்றங்கள் சட்ட திருத்த வரைவு மசோதா 2024 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மாவட்ட அளவிலான சிறப்பு வணிக நீதிமன்றங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது உயர் நீதிமன்றங்களில் மட்டுமே வணிக நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே அந்தந்த உயர் நீதிமன்றங்களில் கருத்தை கேட்டு, தேவையான அளவில் மாவட்ட அளவில் வணிக நீதிமன்றங்கள் அமைக்க சட்ட திருத்த வரைவு மசோதா பரிந்துரைக்கிறது. இது குறித்து வரும் 22ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என ஒன்றிய சட்ட அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post வரைவு திருத்த மசோதா அறிமுகம்; மாவட்ட அளவிலான வணிக நீதிமன்றங்கள்: பொதுமக்கள் கருத்து கூறலாம் appeared first on Dinakaran.