×

தந்தையை சரமாரி வெட்டிய மகன் கைது மது குடிக்க பணம் தராததால்

பேரணாம்பட்டு, நவ.13: பேரணாம்பட்டு அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை சரமாரி வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர். பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் தர்(50). கூலித்தொழிலாளி. இவரது மகன் தமிழ்ச்செல்வன்(23). இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதாம். நேற்று முன்தினம் இரவு தமிழ்ச்செல்வன் தனது தந்தை தரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தாராம். பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த தர் வீட்டில் இருந்த விறகு வெட்டும் கத்தியை எடுத்து, தந்தை தரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயம் அடைந்த அவரை மனைவி மற்றும் பிள்ளைகள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மேல்பட்டி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, நேற்று தமிழ்ச்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை மகனே சரமாரி வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தந்தையை சரமாரி வெட்டிய மகன் கைது மது குடிக்க பணம் தராததால் appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,Mata Koil Street ,Tamilchelvan ,
× RELATED மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ வழக்கில் வலை