- திமுக
- கொல்லிட்
- மயிலாதுதுரை மாவட்டம்
- கொள்ளிடம் கிழக்கு
- மேற்கு
- கொள்ளிடம்
- திமுக மாவட்டம்
- நிவேதா முருகன்
- சீர்காழி
- சட்டமன்ற உறுப்பினர்
கொள்ளிடம், நவ. 12: கொள்ளிடத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் கொள்ளிடத்தில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை வகித்தார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல்களை வழங்கி பேசுகையில், ஒவ்வொரு முறையும் நாம் வெற்றி பெற்று வரும் போது பல சாதனைகளை நிகழ்த்துகின்றோம். கலைஞர் முதல்வராக இருந்தபோது 2006 வரை பொற்கால ஆட்சி நடைபெற்றது.இடையில் பத்தாண்டு காலம் எந்தவித மக்கள் நலனும் இல்லாத ஆட்சி நடத்தியதை நாம் பார்த்தோம். மைனாரிட்டி பாஜக மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை பாஜக வழங்கவில்லை. இதனால் நிதி இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் நிலையானதொரு ஆட்சியை முதல்வர் தந்து கொண்டிருக்கிறார். வரும் 2026 இல் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.
மாநில வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளரும் சீர்காழி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான தினேஷ்குமார்,மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேது ரவிக்குமார், மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன்,ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட,ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி நன்றி கூறினார்.
The post கொள்ளிடத்தில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.