×

வட்டத்தில் சிறந்த பள்ளிகளாக மூன்று அரசு பள்ளிகள் தேர்வு

சிவகங்கை, நவ.12: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், கற்பித்தல் திறன், பள்ளி கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இதனடிப்படையில் 2023-24ம் கல்வி ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருப்புவனம் பழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் நவ.14 அன்று நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வட்டத்தில் சிறந்த பள்ளிகளாக மூன்று அரசு பள்ளிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Asha Ajith ,
× RELATED நாளை படைவீரர் குறைதீர் கூட்டம்