×

நாளை படைவீரர் குறைதீர் கூட்டம்

 

சிவகங்கை, டிச. 6: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூடத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர், சார்ந்தோர், தற்போது ராணுவத்தில் பணிபுரியம் படைவீரரின் குடும்பத்தினர்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நாளை படைவீரர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Collector ,Asha Ajith ,Collector ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமனம் கோரி கலெக்டரிடம் மனு