×

தாரமங்கலம் அருகே சேவல் சண்டை நடத்திய 7பேர் கைது

தாரமங்கலம், நவ.11: தாரமங்கலம் அருகே பனங்காட்டூர் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக, நேற்று தாரமங்கலம் போலீஸ் எஸ்ஐ ஆழகுதுரைக்கு புகார் வந்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சேவல் சண்டையில் ஈடுபட்ட நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது, சேவல் பந்தயம் நடத்திய பிரபாகரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து 7பேரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இதில் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம்(30), தோப்பூரை சேர்ந்த ரத்தினவேல் மகன் கண்ணன்(22), சின்னப்பம்பட்டியை சேர்ந்த அய்யனார்(30), மோட்டுபட்டியை சேர்ந்த சங்கர்(29), கோணகாபாடியை சேர்ந்த சதிஷ்(32), ஆக்கிரைபட்டி ராஜ்குமார்(27), பணகட்டூரை சேர்ந்த பிரபாகரன்(27) 7பேரை கைது செய்தனர். இதில் ₹4500 பணம், ஒரு பந்தய சேவல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பிரபாகரனை தேடி வருகின்றனர்.

The post தாரமங்கலம் அருகே சேவல் சண்டை நடத்திய 7பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharamangalam Daramangalam ,Tharamangalam Police ,SI ,Adalkudhury ,Banangatur ,Dharamangalam ,Daramangalam ,
× RELATED சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்க வந்த...