×

ஜிபிஎஸ் சிக்னல்களில் வடகொரியா குறுக்கீடு: தென்கொரியா கண்டனம்

சியோல்: தென்கொரியாவின் மேற்கு எல்லை நகரமான கேசோங் மற்றும் அருகில் உள்ள ஹேஜூ நகரங்களில் ஜிபிஎஸ் சிக்னல்களை கையாளும் வடகொரியாவில் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் ஏராளமான பயணிகள் விமானம் மற்றும் ஏராளமான கப்பல்களின் செயல்பாடுகளையும் சீர்குலைத்தது. ஜிபிஎஸ் சிக்னலில் குறுக்கீடு செய்யும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை வடகொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தென்கொரியா வலியுறுத்தி உள்ளது.

இல்லையென்றால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் வடகொரியா தான் பொறுப்பேற்க கூடும் என்றும் தென்கொரியா எச்சரித்துள்ளது. எனினும் ஜிபிஎஸ் சிக்னல்களை வடகொரியா எவ்வாறு தலையிடுகிறது மற்றும் இடையூறுகளின் அளவு உள்ளிட்டவை குறித்து விவரிக்கவில்லை.

The post ஜிபிஎஸ் சிக்னல்களில் வடகொரியா குறுக்கீடு: தென்கொரியா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : North Korea ,South Korea ,Seoul ,Kaesong ,Heiju ,South ,Dinakaran ,
× RELATED அனைத்து போயிங் விமானங்கள் ஆய்வு: தென் கொரியா முடிவு