டெய்ர் அல் பலா: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 போலீஸ் அதிகாரிகள்,3 சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் 15 மாதங்களுக்கும் மேலாக காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 45,000 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அல் மவாஸி பகுதியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் அடித்து வரும் நிலையில், வீடு, உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த முகாமில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில்,அல் மவாஸியில் இஸ்ரேல் விமானம் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில்,3 சிறுவர்கள், 3 பெண்கள், 4 ஆண்கள் பலியாகினர். உயிரிழந்த ஆண்களில் 2 பேர் உயர் போலீஸ் அதிகாரிகள் என்று நாசர் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. காசா முனை பகுதியில் நடந்த இன்னொரு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் காசாவிற்குள் வாகனங்களில் கொண்டுவரப்படும் நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் என்று அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
The post காசாவில் இஸ்ரேல் தாக்குதல் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 18 பேர் பலி appeared first on Dinakaran.