×

தேச துரோக வழக்கில் இந்து துறவியின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு

டாக்கா: இஸ்கான் முன்னாள் தலைவரும், வங்கதேச சம்மிலிதா சனாதானி ஜக்ரன் ஜோட் அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான சின்மய் கிருஷ்ணதாஸ் கடந்த நவம்பர் 25ம் தேதி டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தேசியக் கொடியை அவர் இழிவுபடுத்தியதால் தேச துரோக வழக்கில் அவர் கைதாகி சிட்டோகிராமுக்கு அழைத்து வரப்பட்டார். அடுத்த நாள் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, வங்கதேச உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணதாஸ் மீண்டும் ஜாமீன் கோரி சிட்டோகிராம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த மாதம் 3ம் தேதி இந்த வழக்கில் கிருஷ்ணதாஸ் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகாததால் ஜனவரி 2ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கிருஷ்ணதாஸ் தரப்பில் 11 வழக்கறிஞர்கள் குழு ஆஜரானது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். கிருஷ்ணதாசை விடுவித்தால் மீண்டும் வன்முறையை தூண்டுவார் என அரசு தரப்பில் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

The post தேச துரோக வழக்கில் இந்து துறவியின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Chinmay Krishnadas ,ISKCON ,Sammilita Sanatani Jagran Jot ,Dinakaran ,
× RELATED பள்ளி பாடபுத்தகங்களில் வங்கதேச தந்தை...