×

கனடாவில் வசிக்கும் சீக்கியர்கள் அனைவரும் காலிஸ்தானிகள் அல்ல: பிரதமர் ட்ரூடோ விளக்கம்

ஒட்டவா: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம்சாட்டுகிறார். இந்த விவகாரத்தால் இந்தியா, கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒட்டவாவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ட்ரூடோ அளித்த பேட்டியில், ‘‘கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இங்குள்ள சீக்கியர்கள் அனைவரும் காலிஸ்தானிகள் அல்ல. அதே போல, பிரதமர் மோடி அரசின் ஆதரவாளர்களும் பலர் இங்கு உள்ளனர். அவர்கள் அனைவரும் இங்குள்ள இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை’’ என கூறினார்.

மாணவர் விசா நிறுத்தம்
பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, இந்தியா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அனுமதி விண்ணப்பங்களை விரைவுபடுத்துவதற்காக 2018ம் ஆண்டில் கனடாவில் மாணவர் விசா வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிகம்பேர் கனடாவில் குடியேறி விட்டதாக புகார் எழுந்தது. இதனால் இந்த திட்டத்தை கனடா தற்போது நிறுத்தியுள்ளது. இந்த உத்தரவால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

The post கனடாவில் வசிக்கும் சீக்கியர்கள் அனைவரும் காலிஸ்தானிகள் அல்ல: பிரதமர் ட்ரூடோ விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Canada ,Trudeau ,Ottawa ,India ,Hardeep Singh Nijjar ,Diwali ,
× RELATED ஆட்சி கவிழும் அபாயம் கனடா பிரதமர்...