×
Saravana Stores

“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் விருது உள்ளிட்ட விருதுகளை காண்பித்து முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான “United Nation Interagency Task Force Award” விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது, ஆகிய இரண்டு விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான “United Nation Interagency Task Force Award” விருது பெருகி வரும் தொற்றா நோய்களின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக “மக்களைத் தேடி மருத்துவம்” எனும் உன்னதமான திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் இயலாமையில்உள்ள நபர்களுக்கு தொற்றா நோய்க்கான மருந்து பெட்டகம் வழங்குதல்,இயன்முறை சிகிச்சை சேவை, நோய் ஆதரவு சிகிச்சை, CAPD டயாலிஸிஸ்பேக் வழங்குதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து 7.11.2024 வரை மாநில அளவில் 1,98,25,487 பயனாளிகள் முதன் முறை சேவைகளையும் 4,22,79,337 பயனாளிகள் தொடர்சேவைகளையும் பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தின் தொடர்ச்சியாக இதயம் பாதுகாப்போம் திட்டம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு திட்டம். தொழிலாளர்களை தேடி மருத்துவம், சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம். நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், பாதம் பாதுகாக்கும் திட்டம், சிறுநீரகம் விழித்திரை பாதிப்புகளை சீர் செய்யும் மருத்துவம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் 25 செப்டம்பர் 2024 அன்று நியூயார்க்கில் நடந்த 79-வதுஐ.நா.பொது சபையின் லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ் கூட்டத்தில் 2024-க்கான டாஸ்க் போர்ஸ் விருதுகள் (Task Force Awards 2024) அறிவிக்கப்பட்டது. புதுமை மற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தல் உட்பட தொற்றாநோய்கள் மற்றும் மனநலம் தொடர்பான சிறந்த பணிகளை அங்கீகரிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் கொள்கை மற்றும் தர நிலையுடன் இணைந்து திறனுதவித் தொழில் நுட்பவியல் (assistive technology) பணியின் முக்கியத்துவத்தினை வழங்கப்படுகின்றன.அதில் சுகாதார அமைச்சகங்கள் அல்லது சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம் என்ற பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொற்றாநோய் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி “மக்களைத் தேடி மருத்துவம்” தமிழ்நாட்டை உலகத்திற்கே முன்மாதிரியான மாநிலமாக விளங்கச் செய்கிறது.

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில் இரண்டாவது இடத்திற்கான விருது பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. क 20.09.2024 “Global Food Regulators Summit-2024”, மண்டபம், புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் இரண்டாவது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.இந்திய அளவில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையானது, தொடர்ந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் மருந்துத் துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம், உணவு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் மரு. டி.எ. தேவபார்த்தசாரதி, கடலூர் மற்றும் வேலூர் மாவட்ட நியமன அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் விருது உள்ளிட்ட விருதுகளை காண்பித்து முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Shri. ,M. K. Stalin ,Secretariat ,Minister of the Department of Medicine and Public Welfare ,Mr. ,Ma. Subramanian ,United Nations ,First Minister ,Dinakaran ,
× RELATED பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு