×

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: காலை 9 மணி வரை 13.04% வாக்குகள் பதிவு

ராஞ்சி: ஜார்க்கண்டில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 43 தொகுதிகளை கைப்பற்ற 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு நவ.20-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை 13.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிம்தேகா தொகுதியில் அதிகபட்சமாக 15.09 சதவீதமும், ராஞ்சியில் 12.06 சதவீதமும், செரைகேலா-கர்சவான் தொகுதியில் 14.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை 13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: காலை 9 மணி வரை 13.04% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Jharkhand Legislature Election Poll Turnaround ,Ranchi ,Jharkhand ,Assembly ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்..!!