×

புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. ஆளும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில்

புல்டோசர்களை கொண்டு கட்டடங்களை இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்; சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதிகார வர்க்கம் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு குற்றம் தொடர்பாக நீதி வழங்கும் பணிகள் நீதிமன்றத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பதற்காகவே அவரது சொத்துகளை இடிக்க முடியாது. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் ஒருவரை குற்றவாளி என அறிவிக்க முடியாது உச்சநீதிமன்றம். அரசு அதிகாரிகள் நீதிபதிகளாக மாறி, குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை இடிப்பது குறித்து முடிவெடுக்க முடியாது. ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அவருக்கும் குறிப்பிட்ட உரிமைகளும் சட்டப் பாதுகாப்பும் உண்டு.

சட்டப்படியான நடைமுறைகளை மேற்கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக குற்றவாளிகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. புல்டோசர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் உ.பி. பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

The post புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Justice Kawai ,Pa. J. K. ,Uttar Pradesh ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...