×

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு தடை: கனடா அரசுக்கு இந்தியா கண்டனம்

டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு தடைவிதித்த கனடா அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய உளவுத்துறைக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. மேலும் கனடாவில் இந்து கோயில்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.

இந்த விவகாரங்கள் இருநாட்டு உறவில் விரிசல்களை உருவாக்கியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வெளியுறவு அமைச்சருடன் இணைந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டி பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியானது. இந்நிலையில் அந்த ஆஸ்திரேலிய ஊடகத்தின் சமூக வலைத்தளங்களை முடக்கி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்வீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டி ஒளிபரப்பான சில மணி நேரத்திலேயே ஆஸ்திரேலிய ஊடகம் முடக்கப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாகவும், பேச்சு சுதந்திரம் குறித்த கனடாவின் நாடகத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு எனவும் கூறினார். தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் தருவதன் பின்னணியில் தற்போது கனடாவில் ஊடக சுதந்திரம் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

The post வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு தடை: கனடா அரசுக்கு இந்தியா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Foreign Minister ,Jaisankar ,India ,Government of Canada ,Delhi ,Canadian government ,Canada ,Indian ,Interior Minister ,Amitshah ,Hardeep Singh Nijjar ,Dinakaran ,
× RELATED உறவுகளை மேம்படுத்துவது குறித்து...