×

முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

சென்னை: சூரசம்ஹாரம் மற்றும் இன்று முகூர்த்த தினம் என்பதால், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.1000க்கும், ஐஸ் மல்லி ரூ.900க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.1,500க்கும், அரளி பூ ரூ.230க்கும், சாமந்தி ரூ.120க்கும், சம்பங்கி ரூ.300க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லெட் ரோஸ் ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், சூரசம்ஹாரம் மற்றும் முகூர்த்த தினங்களை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை நேற்று இருமடங்காக அதிகரித்தது. எனினும், பூக்களை வாங்க சில்லறை வியாபாரிகளின் வருகை அதிகரித்ததால் விற்பனையும் களைகட்டியது என்றார்.

The post முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Muhurtha Day ,Chennai ,Surasamharam ,Coimbed Flower Market ,
× RELATED முருங்கைக்காய் தக்காளி விலை மீண்டும் குறைந்தது