- மீள்தன்மை
- திருப்பூர்
- திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்
- அவிநாசி ரோடு, திருப்பூர்
- ஜனாதிபதி
- கோவிந்தசுவாமி
- Soundararajan
- பொருளாளர்
- செல்வராஜ்
திருப்பூர்: திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சௌந்தரராஜன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது: அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக நூல் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. நூல் விலை கிட்டத்தட்ட 35 சதவீதம், ரப்பர் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளதால் எலாஸ்டிக் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை உயர்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பாலியஸ்டர் நூல் விலை உயர்ந்து வருவதால் உற்பத்தி முடங்கும் அபாயம் உள்ளது. எலாஸ்டிக் என்று சொல்லக்கூடிய ஓவன் எலாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் கலர் நூலான கலர் டைஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலை உயர்வு தொடர்கிறது. மேலும், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓவன் எலாஸ்டிக்கில் பினிஷிங் போடுகின்ற ”ஹீட் செட்டிங்” நடைபெற முடியாமல் உள்ளது. இதனால் எலாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டு வருகிற தொழிலாளர்களுக்கு உணவு வசதி செய்து கொடுக்க முடியவில்லை.
எனவே பாலியஸ்டர் நூல் விலை உயர்ந்து வருவதால் நாளை (புதன் கிழமை) முதல் 50 சதவீதம் உற்பத்தியை குறைக்க உள்ளோம். இதுபோல் வருகிற 25ம் தேதி முழு உற்பத்தியையும் நிறுத்த முடிவு செய்துள்ளோம். இந்த சூழ்நிலையை சமாளிக்க நாளை முதல் 25 சதவீதம் விலை உயர்வையும் அமல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
