×
Saravana Stores

அரசு வேலைக்கான பணிநியமன விதிகளை பாதியில் மாற்றக்கூடாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: அரசு வேலைகளில் சேருவதற்கான விதிகளின் செயல்முறைகளை பாதியில் மாற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பணிநியமன செயல்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘‘அரசு பணி நியமன செயல்முறை அதற்கான விளம்பரங்கள் வெளியிடுவதில் தொடங்கி காலி பணியிடங்களை நிரப்புவதில் நிறைவடைகிறது.ஏற்கனவே இருக்கும் விதிகள் அனுமதிக்காத வரை ஆட்சேர்ப்பு தகுதிகளுக்கான விதிகளை பாதியில் மாற்ற முடியாது.

தற்போதுள்ள விதிகள் அல்லது விளம்பரங்களின்கீழ் நிபந்தனைகளை மாற்ற அனுமதிக்கும் பட்சத்தில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14(சமத்துவத்திற்கான உரிமை)தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தன்னிச்சையான தன்மையை தவிர்க்க வேண்டும். ஆட்சேர்ப்பு செயல்முறையின் வெவ்வேறு நிலைகளுக்கான வரையறைகளை அமைப்பதற்கு தற்போதுள்ள விதிகள் அல்லது விளம்பரங்கள் அனுமதித்தால் அத்தகைய அளவுகோல் ஏதேனும் அமைக்கப்பட்டு இருந்தால், ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்குவதற்கு முன் அதனை குறிப்பிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

The post அரசு வேலைக்கான பணிநியமன விதிகளை பாதியில் மாற்றக்கூடாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Chief Justice ,T.Y. ,Chandrachud ,
× RELATED கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி...