×
Saravana Stores

தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*படகு சவாரி செய்து மகிழ்ச்சி

ஏலகிரி : தீபாவளி ெதாடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். மேலும், குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏலகிரி மலையானது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி எனவும், மலைகளின் இளவரசி எனவும் அழைக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் விழா நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில், தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக கடந்த 4 நாட்களாக ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அங்குள்ள படகு இல்லத்தில் குடும்பத்தோடும், நண்பர்களோடும் படகு சவாரி செய்தனர். மேலும், இயற்கை பூங்காவில் பூக்களை ரசித்தும், புல் தரையின் மீது அமர்ந்தும் பொழுதுபோக்கினர்.

அதேபோல், பறவைகள் சரணாலயத்தில் செல்லப்பிராணிகளுக்கு உணவு கொடுத்தும், விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும், செல்பி பாண்டா பார்க்கில் செல்பி எடுத்தும், குழந்தைகள் சாக்லேட் உற்பத்தி செய்தும், சாகச விளையாட்டு தளத்தில் குழந்தைகள் படகு சவாரி செய்தும், வில்லம்பு எய்தும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் ஏலகிரி மலையில் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

The post தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலி ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Elagiri hill ,Diwali ,Elagiri ,Jolarpet union ,Tirupattur district ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்