×
Saravana Stores

டெம்சோக் பகுதியில் ரோந்து பணி தொடங்கியது; அருணாச்சல் எல்லையில் சீன வீரர்களை சந்தித்த அமைச்சர்: உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார்


பும்லா: அருணாச்சல் – சீன எல்லையான பும்லா பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் சீன வீரர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவும் சீனாவும் கடந்த சில நாட்களுக்கு முன் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருவது ெதாடர்பான சில முக்கிய முடிவுகளை அறிவித்தன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் இருந்த பதற்றம் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. தற்போதைய முடிவுகளின்படி டெம்சோக் உள்ளிட்ட சில பகுதிகளில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ள வேண்டும். இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரம் ரோந்து செல்லலாம் என்று முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி டெம்சோக் பகுதியில் நேற்று இந்திய வீரர்கள் மீண்டும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) அமைந்துள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் ஆகிய இடங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை தீர்க்கப்பட்டது. இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று முதல் டெம்சோக் பகுதியில் ரோந்து பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்திய வீரர்கள் டெப்சாங் பகுதிகளிலும் ரோந்து பணியை தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இரு நாடுகளில் எல்லைப் பகுதியில் இணக்கமான சூழலையும், நம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் தீபாவளி தினமான நேற்று முன்தினம் சீன வீரர்களுக்கு, இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சந்தித்தார். அவர்களுடன் தீபாவளி கொண்டாடினார்; அப்போது சீன எல்லையான பும்லா கணவாயில் சீன வீரர்களிடமும் அமைச்சர் பேசினார். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் அமைச்சர் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் எல்லை மேம்பாடு குறித்து அனைவரும் பெருமைப்படுவார்கள். அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

The post டெம்சோக் பகுதியில் ரோந்து பணி தொடங்கியது; அருணாச்சல் எல்லையில் சீன வீரர்களை சந்தித்த அமைச்சர்: உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : PATROL ,DEMCHOK AREA ,MINISTER ,ARUNACHAL BORDER ,BUMLA ,ARUNACHAL ,Union Minister ,Kiran Rijiju ,Bhumla ,India ,China ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது...