×
Saravana Stores

தீபாவளியன்று பட்டாசு வெடிக்காமல் வவ்வால்களுக்கு அடைக்கலம் தந்த கிராம மக்கள்

bats, shelterசோமனூர் : சோமனூர் அடுத்த கிட்டம்பாளையம் ஊராட்சியல் பழம்தின்னி வவ்வால்கள் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது. வவ்வால்களுக்காக அப்பகுதி கிராம மக்கள் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையின் போதும் கூட பட்டாசு வெடிப்பதை தவிர்த்து விட்டு பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வவ்வால்களுக்கு அடைக்கலம் தந்து வருகின்றனர்.

இங்கு உள்ள பழமையான 8 மரங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. இரவு நேரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை இனங்களும் தங்கி வாழ்ந்து வருகிறன. இதனால் அந்த பகுதி எப்போதுமே பரவைகள் சரணாலையம் போல காணப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் எப்போதுமே அந்த மரங்களுக்கு ஓய்வின்றி பறவைகள் தங்கி வருவதால் அப்பகுதியில் எப்போதும் பறவைகளின் சஞ்சார சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு சத்தத்தால் வவ்வால்கள் மற்றும் பறவைகள் பயந்து விடும் என்பதால் அப்பகுதியினர் பட்டாசு வெடிப்பதை முழுமையாக தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அந்தப் பகுதியில் திருவிழா காலங்களில் மேளதாளங்களையும், ஒலிபெருக்கிகளையும் தவிர்த்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் செயல்பாடுகளை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

இங்கு உள்ள வவ்வால்கள் எப்போதும் மாலை நேரங்களில் வடக்கு திசையை நோக்கி குன்னூர், ஊட்டி போன்ற பகுதிகளுக்கு இறை தேடி சென்று விட்டு மீண்டும் விடியற்காலையில் அந்த மரங்களுக்கு வந்து அடைக்கலம் புகுந்து விடுகிறது. இங்குள்ள வவ்வால்களினால் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லை என்பதால் எப்போதும் பொதுமக்கள் இந்த வவ்வால்களுக்கு ஒரு பாதுகாப்பு சரணம் சரணாலயமாக உள்ளனர்.

The post தீபாவளியன்று பட்டாசு வெடிக்காமல் வவ்வால்களுக்கு அடைக்கலம் தந்த கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Kittambalayam ,Panchayat Palamthinni ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில்...