×
Saravana Stores

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்தது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14,273 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,568 கனஅடியாக சரிந்தது.

இதனிடையே, டெல்டா பாசனத்துக்கு நீரின் தேவை அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2500 கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 108.22 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 108.55 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 76.29 டிஎம்சியாக உள்ளது.

 

The post மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED 90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை!