×
Saravana Stores

வணிக பயன்பாட்டில் உள்ள 5,145 குடியிருப்பு வரி இனங்கள் கண்டுபிடிப்பு திருத்திய வரி விதிக்க துணை கமிஷனர், ஏஆர்ஓக்களுடன் ஆலோசனை வேலூர் மாநகராட்சியில்

வேலூர், அக்.29: வேலூர் மாநகராட்சியில் வணிக பயன்பாட்டுக்கான கட்டிடங்களுக்கு குடியிருப்பு வரி 5,145 இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை கமிஷனர், ஏஆர்ஓக்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில், வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு குடியிருப்பு வரி விதிக்கப்பட்டுள்ளதையும், பெரிய கட்டிடங்களுக்கு குறைந்த வரி விதிக்கப்பட்டிருந்தால் அதனையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி வேலூர் மாநகராட்சியில் கமிஷனர் ஜானகி உத்தரவின்ேபரில், துணை கமிஷனர் சசிகலா தலைமையில் குழு அமைக்கப்பட்டு வரியினங்கள் ஆய்வு பணி நடந்தது. இதில் மாநகராட்சி முழுவதும் 5,145 வணிக பயன்பாட்டு இனங்கள், குடியிருப்பு வரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் வரி விதிப்பு தொடர்பாக வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் துணை கமிஷனர் சசிகலா தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி வருவாய் அலுவலர்கள் நாகராஜன், குமரவேல், சுரேஷ், தனசேகர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாநகராட்சி முழுவதும் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்ட குடியிருப்பு இனங்கள் 5,145 கண்டறியப்பட்ட நிலையில், திருத்திய வரி விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வரியினங்கள் கண்டறியும் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வணிக பயன்பாட்டில் உள்ள 5,145 குடியிருப்பு வரி இனங்கள் கண்டுபிடிப்பு திருத்திய வரி விதிக்க துணை கமிஷனர், ஏஆர்ஓக்களுடன் ஆலோசனை வேலூர் மாநகராட்சியில் appeared first on Dinakaran.

Tags : AROs ,Vellore Corporation ,Vellore ,Tamil Nadu Corporation ,Dinakaran ,
× RELATED வேலூர்-காட்பாடி சாலையில் புதிய...