×
Saravana Stores

பூண்டு விலை உயர்ந்து கிலோ ₹600 வரை விற்பனை குடியாத்தத்தில் மக்கள் அதிர்ச்சி தொடர் மழையால் வரத்து குறைவு

குடியாத்தம், நவ.10: வடமாநிலங்களில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்து குடியாத்தம் பகுதியில் பூண்டு விலை அதிகரித்துள்ளது. கிலோ ₹600 வரை விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மருத்துவ குணமுள்ள பூண்டு தினமும் உணவு சமைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்த பூண்டின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், குடியாத்தம் காய்கறி சந்தையில் ₹300 முதல் ₹400 வரை கடந்த மாதம் விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ பூண்டின் விலை தற்போது ₹500ஐ தாண்டியுள்ளது. மொத்த வியாபாரத்தில் ₹400 முதல் ₹450 வரையும், சில்லறை விலையில் ₹500 முதல் ₹600 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து குடியாத்தம் பகுதியை சேர்ந்த பூண்டு வியாபாரிகள் கூறுகையில், ‘மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது அங்கு தொடர் கனமழை பெய்வதால் பூண்டு வரத்து வெகுவாக குறைந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் 1 கிலோ பூண்டின் விலை ₹100 அதிகரித்துள்ளது. மேலும் பூண்டின் விலை அதிகரிக்கும். பூண்டின் விலை குறைய இன்னும் 2 மாதங்கள் ஆகலாம். ஒவ்வொரு நாளும் ₹30 முதல் ₹40 வரை அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் பூண்டின் விலை குறைய வாய்ப்புள்ளது’ என்றனர்.

The post பூண்டு விலை உயர்ந்து கிலோ ₹600 வரை விற்பனை குடியாத்தத்தில் மக்கள் அதிர்ச்சி தொடர் மழையால் வரத்து குறைவு appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Kudiatham ,Dinakaran ,
× RELATED நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பலி குடியாத்தம் அருகே