×

குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் மன அழுத்தத்தை குறைக்க பஜனை பாடல்: சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: அரியானா மாநிலம் என்சிஆர் மாவட்டமான குருகிராமில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற தேசிய காவலர் தினத்தில் காவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த இஸ்கான் நிறுவனதுறவிகள் பஜனை பாடல்களை பாடினர். அப்போது உற்சாகம் அடைந்த காவலர்கள் அவர்களுடன் இணைந்து பஜனை பாடல்களை பாடினர்.

அதிகாரிகளோ அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்தனர். இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை பகிர்ந்த நெட்டிசன்கள் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரியானாவில் தற்போது பாஜ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 3வது முறையாக ஆட்சியை பிடித்த பாஜ அனைத்து துறைகளையும் காவிமயமாக்கி வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ஒருவர், ‘அவசர தேவைக்கு நாங்கள் 108க்கு அழைத்தால் போலீசார் பஜனை பாடலில் பிஸியாக இருப்பார்கள். இப்படி போலீசாருக்கு நிகழ்ச்சி நடத்துவது அறிவியலுக்கு எதிரானது. மூட நம்பிக்கையை அதிகரிக்கும் செயல்,’என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் மன அழுத்தத்தை குறைக்க பஜனை பாடல்: சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Gurugram Commissioner ,New Delhi ,National Constable Day ,Gurugram, NCR ,Aryana ,ISKCON ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு