×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படம், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம், ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். விஜய், பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கின்றனர். யோகி பாபு, இயக்குனர் செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.இந்நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை நேற்று படக்குழு  வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஜய் தோன்றும் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. படக்குழுவினரின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளது. அவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டரைப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். …

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Sun Pictures ,Vijay ,Chennai ,Sun TV Network ,
× RELATED சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக...