×

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

திருத்துறைப்பூண்டி, அக். 26: அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜயன் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், பள்ளி மேலாண்மை குழு தலைவி ரேவதி முன்னிலை வகித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய மாரிமுத்து, மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர். விழாவில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு சீல்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். பள்ளியின் மூத்த ஆசிரியர் முகமது ரஃபீக் நன்றி உரை கூறினார். மேலும் விழாவில் எழிலரசி சக்கரபாணி சிவராமன் உமா மகேஸ்வரி அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi Government School ,Thirutharapoondi ,Thiruthurapoondi Government Boys High School ,Tiruvarur ,District ,Palaniswami ,Tiruthurapundi Government School ,
× RELATED போதை பொருட்கள் எதுவும்...